பாரிமுனை மயிலாப்பூர் வழிதடப்பேருந்து தான் 21
வாரத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை வந்ததால் "போக்கிடம் இன்றி புழுமீன் புரலும் சாக்கடை நதிகள் சங்கமிக்கின்ற" சென்னை வந்தடைந்தேன்.
விடியல் காலை வந்துவிட்டதால் மூன்று முழுநாட்கள் கைவசம் உள்ளது.
விரைவாக வெளியேவந்து ஆடோக்காரகளிடம் கபடி ஆடி விட்டு சுரங்கபாதையில் கையிலும் முதுகிலும் மூட்டைக்களுடன் இறங்கி ஏறினேன்.
சென்ட்ரல் உள்ளிருந்து கிளம்பும் வண்டியும் வேறு இடங்களிலிருந்து கடக்கும் வண்டிகளும் எம்.எம்.சி மருத்துவமனை வாசலில் நின்றாகவேண்டும் என் ஐந்து வருட அனுபவம் அன்றும் கைகொடுத்தது.
வந்து நின்றவுடன் சில ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டும் தான் தென் பட்டனர். புறநகர் வாசிகளும் மற்ற பேருந்து பிரயாணிகளும் பேருந்தில் முட்டி மோதி ஏறிக்கொண்டிருந்தனர். பின்னர் வழக்கம் போல் என் பேருந்து குறைந்த பயணிகளோடு வந்தது. 21 .எனக்கு இருக்கையுடன் தயாராக வந்து நின்றது. சென்ட்ரல் 2 மயிலாப்பூர் இதைவிட சொகுசுப்பயணமும் பேருந்தும் சென்னையில் இருக்க முடியாது என்று மனதில் பாராட்டிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தேன்.
கண்டக்டர் என் இருக்கை அருகே வந்துகொண்டிருந்தார். ஜீன்ஸில் இருக்கும் பத்து ரூபாய்க்கு கைபோனது, முதலில் வந்தது மூன்று மாதம் முன்பே குறிவைத்து புக் செய்த ரயில் டிக்கெட், இனி அது பயனில்லை அடுத்து நான் முன்பே தயாராக வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டு கையில் எடுத்தேன். என் நினைவிற்கு தெரிந்த வரை மயிலாப்பூர் மூன்று ருபாய் தான். சமீபத்தில் தான் விலை ஏற்றம் இப்பொழுது ஐந்து ருபாய் ஆகிவிட்டது.
இவ்வளவு தான் கதை. இதை கேட்கும் பொழுதே அசைப்போடும் நண்பர்களுக்காக.